பிரதமரை பதவி நீக்க திட்டம்!


பிரதமர் தினேஷ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

சன்ன ஜயசுமணவின் கருத்துக்கள்

நாடாமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய பிரதமரை நியமிப்பதற்கு ஆளுங்கட்சியின் குழுவொன்று தயாராகி வருவதாகவும், அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் ஆதரவை சிலர் கோருவதாகவும் தெரிவித்தார்.

மூன்று பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ள இந்த குறுகிய காலத்தில் நான்காவது பிரதமரை நியமிப்பதை தானும் தனது குழுவினரும் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.