இளைஞர்கள் சொல்லை ரணில் கேட்க வேண்டும்; சாணக்கியன்!
நாடு நாசமாக போய்விட்டது. அதற்கு காரணமானவர்கள் இப்போது நாட்டுக்கு மீண்டும் வந்து விட்டனர். நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கு இளைஞர்கள் தான் காரணம் என நாடளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவித்த அவர்,
இளைஞர்கள் சொல்லை தற்போது உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்க வேண்டும். இல்லையென்றால் ரணில் அலை உருவாகும்.
இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதையெல்லம் விட்டு விட்டு, சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி கட்சி மாநாடு ஒன்றுக்காக நாமல் ராஜபக்சவை அழைத்து அழகு பார்த்துள்ளார். நாட்டில் ஒழிந்து வாழ்கிறார் நாமல்.
ஆகவே இப்படியான செயற்பாடுகளால் மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம். இவரை நாம் வன்முறையாக கண்டிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை