மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

 
இலங்கையின் மண்ணெண்ணெய் விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாக  மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது.


இந்தநிலையில் இது மீன்பிடிக்கான பருவம் ஆரம்பமாகியுள்ளது. அத்துடன்  எரிபொருள் விநியோகமும் சீராகியுள்ளதால், மீன்களின் விலை குறைந்துள்ளது என்று இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் டபிள்யூ டி யசந்த தெரிவித்தார்.


ஏறக்குறைய ஒரு வருடத்தில் விலை வீழ்ச்சியடைவது இதுவே முதல் தடவை என்றும் யசந்த கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.