கனடாவில் ஆயுத தாக்குதல் - 10 பேர் பலி - பலர் காயம்!!

 
நேற்றைய தினம்  கனடாவின் சஸ்கட்சாவான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர் எனவும்  15க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இந்த தாக்குதல் கனடாவின், ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன.


கனேடியன் விளையாட்டு போட்டிகள் ரஜினா நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தியவர் மற்றும் தாக்குதலுக்கான பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.


கனேடிய காவல்துறை, தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. 31 வயதான டேமியன் செண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் செண்டர்சன் ஆகியோர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.


கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தாக்குதல் குறித்து தெரிவிக்கையில்,   நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரமான மற்றும் கவலையளிக்கும் செயலாகும் எனக்  குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம்  காரணமாக கனடா முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்ட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.