கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

 


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில ஆண் ஒருவர் நேற்று (22) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கடற்கரையில் சம்பவ தினமான இரவு சடலம் ஒன்று இருப்பதாக மீனவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.