காலத்தால் செய்த உதவி - புலம்பெயர் உறவு ஒருவரின் மனிதநேயம்!!

 
நேற்று முந்தினம், தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இளம்பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  தாயார் இறுதி யுத்தத்தில் செல் தாக்குதலுக்கு இலக்காகி இறந்துவிட்ட நிலையில் தந்தையாரும் இருதய நோயாளியாக உள்ளார். 


 மிக வறுமையான குடும்பச்சூழல் கொண்ட, மூத்த  சகோதரியின் பராமரிப்பில் இருந்த,  இவரது மரணச்சடங்கு செய்வதற்கு இயலாத நிலையில்  புலம்பெயர் உறவான  Kuna Sutha என்பவர்  தமது அக்னீஸ்வரம் என்னும் உதவும் அமைப்பின் ஊடாக உடனடியாக ஒரு இலட்சம்(100 000)ரூபாய் பணத்தினை  வழங்கி மரணச்சடங்கிற்கான காரியங்களைக் கவனிக்க உதவியிருந்தார். தற்போதைய இலங்கையின்பொருளாதார உயர்வு காரணமாக சாதாரண வருவாய் உள்ளவர்களே திண்டாடும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த காலங்களில் குறித்த பெண்ணின் வைத்திய பராரிப்பிற்கே அதிக பணம் செலவாகிவிட்ட நிலையில், என்னசெய்வதெனத் தவித்துக்கொண்டிருந்த இந்தக் குடும்பத்திற்கு கனடாவில் வசிக்கும் குணா சுதா என்பவரின்  இந்த உதவி மிக போற்றத்தக்கதொன்றாகும். 


சமூக ஆர்வலர்கள் பலரும் உதவி செய்த புலம்பெயர் உறவிற்கு தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்திருந்தனர். 


புலம்பெயர் உறவுகளின் இத்தகைய பணிகள் போற்றுதலுக்கு உரியது. 

 உயிரிழந்த யுவதியின் இரண்டு சகோதரர்கள் மாவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.