மைதானத்தில் பாம்பு நுழைந்ததில் பரபரப்பு!!

 


இந்தியாவுக்கும்  தென் ஆப்பிரிக்காவுக்கும்  இடையேயான 2 ஆவது டி20 போட்டி  அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.


போட்டியின் இடைநடுவே மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது.


பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர். பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.


பின்னர், பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து மைதானத்திற்குள் சுற்றிய பாம்பை பிடித்து சென்றனர். மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் தடைபட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.