கோபா குழுவிற்கு போட்டியின்றி தலைவர் தேர்வு

 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம், கோபா எனப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


அரசாங்க தரப்பின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பான பிரேரணையை சபாநாயகருக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் கபீர் ஹசீமிற்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.