அண்ணன் தங்கையை பலியெடுத்த விபத்து!!

 


இன்று காலை  நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபல்லா பஜிநந்தா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிஷாந்த். இவர் தனது தங்கையான 5ஆம் வகுப்பு மாணவி மோக்‌ஷாவை இன்று ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.

சூலியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் எதிரே வந்த கார் மீது ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற நிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நிஷாந்தின் தங்கை மோக்‌ஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோக்‌ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி மோக்‌ஷாவும் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.