முல்லைத்தீவில் பதற்றம் - பொலிசார் கண்ணீர் புகை பிரயோகம்!!


மீனவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக முல்லைத்தீவில் போலிசார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரியும் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை  முற்றுகையிட்டு கடந்த 03.10.2022  அன்று தொடக்கம் போராடி வருகின்றனர். முல்லைத்தீவு மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரைஜ பிள்ளைகளுடன் இணைந்து  போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.இந்த நிலையில்,  இவர்களின் கோரிக்கைக்கு எதிர்பார்ப்பை தெரிவித்து மற்றொரு சாரார் போராட்டம் நடத்திய நிலையில் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் போது போலிசார் கண்ணீர் புகை பிரயோகம் மேறகொண்டு  நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.