யாழில். தாய்மாரின் அவலநிலை!!

 


யாழ்ப்பாணம் தாவடி தெற்கு பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹேரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் தாயார் இவரை திருத்தி தருமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

28 வயதான இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை நேற்றையதினம் யாழ் சுன்னாகம் பகுதியில்  போதைக்கு அடிமையான மகனை சீர்திருத்தி தருமாறு  பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் தனது மகனை ஒப்படைத்த நிலையில்,  நீதிமன்ற உத்தரவிற்கமைய  குறித்த சிறுவர் அச்சுவேலி நன்னடத்தை பாடசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.