பல்கலைக்கழகத்தில் மாயமாகும் மாணவர்கள்!!

 


பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், இன்று அதிகாலை தொடக்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாணவர் தங்கியிருந்த விடுதிக்கு பொறுப்பானவரால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு குறித்த மாணவன் பல்க​லைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் வெளியேறும் முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

.அக்கடிதமும் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவனைத் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.