சஜித் சொன்ன தீர்வு?

 


தற்போதைய சந்தையில் எண்ணெய் மற்றும் எரிபொருள் என்பவற்றின் அதிக விலையினால் ஒட்டுமொத்த மீனவ சமூகமும் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (04) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் எழுப்பிய கேள்வி.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் இதர உள்ளீடுகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், மீன்பிடித் தொழில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.இலங்கையின் மிகப்பெரிய மற்றும் இலகுவாக கிடைக்கும் புரத மூலமான மீன் தீவனம் அச்சுறுத்தலுக்குள்ளாகியது குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மையும் அதிகரித்து வரும் இந்நேரத்திலாகும்.

இந்நிலை மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.

ஏறக்குறைய 4,500 பல நாள் மீன்பிடி கப்பல்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான மீன்பிடி படகுகளுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை அரசாங்கம் முறையாக வழங்காததால் இந்நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மண்ணெண்ணெய் விலை 87 ரூபாயில் இருந்து 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிறு மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மீன் சார் உற்பத்திப் பொருட்களின் தட்டுப்பாடும்,அதிக விலையும் நுகர்வோரை தாங்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.

அதற்கிணங்க, இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவொரு பிரச்சினையாகக் கருதி, அரசாங்கத்திடமிருந்து பின்வரும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

01. ஜூலை 06, 2022 அன்று, தற்போதைய மாண்புமிகு ஜனாதிபதி,அப்போது பிரதமராக பதவி வகிக்கும் போது, மண்ணெண்ணெய்கான விலை உயர்வுத் தொகை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் என்று இந்த சபையில் தெரிவித்தார்.

ஆனால், இப்போதும் மீனவர்களுக்கு முந்தைய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாக எனத் தெரியவில்லை. அரசாங்கம் அந்த மானியத்தை மீனவர்களுக்கு வழங்குமா? அப்படியானால், அது எப்போது வழங்கப்படும்?

02. அதேபோல் டீசல் 104 முதல் 430 ரூபாவாகவும், இன்ஜின் ஆயிலின் விலை 650 முதல் 2,500 ரூபா வரையும் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக,பல நாள் மீன்பிடி கப்பல்கள் அதிக உள்ளீடு செலவுகளை தாங்க முடியாமல் தங்கள் செயல்பாட்டை நிறுத்தி விட்டன.மீன்பிடி படகுகளுக்கு தேவையான டீசல்,இன்ஜின் ஆயில் போன்ற அத்தியாவசிய இடுபொருட்களுக்கு சலுகை விலை வழங்க அரசாங்கம் செயல்படுகிறதா? மீன்பிடி கப்பல்களுக்கு சீராக டீசல் விநியோகத்தை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

03. X-Press Pearl கப்பல் விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும்,ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளதாக மீனவர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க இன்னும் எவ்வளவு தொகை மீதமுள்ளது? இதை வழங்க அரசாங்கத்திடமுள்ள அடுத்த செயற்த் திட்டம் என்ன?

04. இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த மீன் தடையை நீக்குவதற்கு முன்னைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி மீன் ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்ததுடன், அமெரிக்க டொலரின் பெறுமதியில் கணிசமான அதிகரிப்புடன் மீன் ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என்றாலும் உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகளால் தொழில்துறைக்கு அந்த நன்மை கிடைக்காது என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துகிறதா? இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது? அவ்வாறு கிடைக்கும் வருமானத்தை ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினருக்கும் முறையாகப் பகிர்ந்தளிக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

05. மீன்பிடி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மீன் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.ஐஸ் தயாரிப்பாளர்கள்,குளிரூட்டி வாகனம் நடத்துபவர்கள்,குளிர்பதன சேமிப்பு மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்பன இவ்வாறு நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மின்வெட்டு,எரிபொருள் விநியோகத் தடைகள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்தத் துறைகளில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக,இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கௌரவ சபைக்குத் தெரிவிக்குமா?எதிர்காலத்தில் மீன்பிடி மற்றும் மீன் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க அரசாங்கம் செயல்படுத்தும் கொள்கை என்ன?

06. மீனவர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமொன்று ஆரம்பிக்கவிருந்ததோடு,அதன் தற்போதைய நிலை என்ன? மீன்வளக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்க அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படியானால் அது யாது?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.