பெண்களுக்கான வலி நிவாரணியாக உள்ள கரட்!!

 


ரட்டின் பல நன்மைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், பெண்களின் பல உடல்நலப் பிரச்சினைகளை சமாளிக்கும் தனிப்பண்பு  கரட்டிற்கு உள்ளது. ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சரியான உணவைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

சரியான உணவு என்றால் அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் முக்கியமான தேர்வு ஆகும்.

காய்கறிகள் பல்வேறு வண்ணங்களில் இருந்தாலும், குளிர்காலத்தில் விளையும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றவை .

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் கேரட், பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இருந்தாலும், கேரட்டில் உள்ள பல பண்புகள், பெண்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் சமநிலையில் உள்ள சிக்கல்கள் பெரும்பாலும் பெண்களுக்கு அதிக தொல்லை தருவது.

இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், பல பிரத்யேக நோய்களுக்கும் காரணம் ஆகிறது. கேரட் போன்ற வேர் காய்கறிகளை சாப்பிடுவது, ஈஸ்ட்ரோஜன் நிலையை கட்டுக்குள் வைக்கிறது.

பிற ஹார்மோன்களின் அளவையும் பராமரிக்கிறது.

மாதவிடாய் காலங்களில், கேரட்டை சாலட் வடிவில் சாப்பிடலாம் அல்லது வேகவைத்து உண்ணலாம். அல்லது கேரட் ஜூஸ் பருகுவது நல்லது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.