மட்டுவிலில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வு!!

 மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் புலம்பெயர் வாழ் உறவுகளின் நிதி அனுசரணையில் தொழில் முயற்சி வாழ்வாதாரத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு, 28.10.2022 வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 4.30 மணிக்கு வளர்மதி நிலைய அரங்கில் இடம்பெற்றது. 


மங்களவிளக்கேற்றல், இறை வணக்கம் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் ஒழுங்குபடுத்தலின்படி நிகழ்வுகளின் அனைத்தும் இடம்பெற்றது. திரு. திருமதி காண்டீபன் குடும்பத்தினருக்கு அவர்களின் பலசரக்கு கடையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு  3 லட்சம் பெறுமதியான பொருட்கள்  வழங்கிவைக்கப்பட்டதுடன் திரு. திருமதி. பார்த்தீபன் குடும்பத்தினருக்கு 2 லட்சம் பெறுமதியான அழகு நிலையத்திற்கான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில் புலம்பெயர் வாழ் உறவுகளின் இத்தகு உதவிகள் போற்றத்தக்கவையாகும். உதவி பெற்றவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ள நிலையில், குறித்த செயற்றிட்டத்தினை பலரும் பாராட்டியுள்ளனர்.


மட்டுவில் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், நிலைய உறுப்பினர்கள் எனப்பலரும் குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.