முதலிடம் பிடித்தது இலங்கையின் உணவு!!
ஆசியாவின் வீதி உணவுகள் சம்பந்தமான கருத்துக் கணிப்பில் இலங்கையின் அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
ஆசியாவில் வீதி உணவுகளாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் 50 வீதமான உணவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் இலங்கையின் இனிப்புச் சுவை, புளிப்புச் சுவை, மிளகாய் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படட் காய்கறி மற்றும் பழ அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய மசாலாக்கள், மிளகாய், மஞ்சள், சீனி,உப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் வெள்ளிக்காய், அன்னாசி, விளாம்பழம், அம்பரலங்காய், மாங்காய், கத்தரிக்காய் ஆகிய அச்சாறு உணவுகள் இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த கருத்து கணிப்பில் இலங்கையின் அப்பத்திற்கும் முதலிடம் கிடைத்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை