ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி முற்றுகைப் போராட்டம்!

 யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் புதன்கிழமை தெல்லிப்பழையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்து இருந்த நிலையில், இன்றைய தினம் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்த பேராட்டத்திற்கான முன் ஏற்பாடாக இன்று காலை 8 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றலில், யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி, வாகனப் பேரணியாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் நோக்கி புறப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் சிவில் அமைக்களும் இணைந்து கொண்டு, அரசாங்கமும், படையினர் வலி வடக்கு தாயகப் பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இடம்பெற்றதோடு, பிரதேச செயலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.