புதுமுறிப்பில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு


கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின்  நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை  வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப.சத்தியராஜ் வயது 36 என்ற   இரண்டு பிள்ளைகளின்  தந்தையே  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பின்னர் புதுமுறிப்பு  குளத்தின் கீழ் உள்ள   நீர்பாசன வாய்க்காலில் சடலத்தை  வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்.

இது  தொடர்பாக மேலதிக  விசாரணை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.