முல்லைத்தீவில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம்!

 


வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி தொடங்கி வைக்கப்பட்டுள்ள 100 நாள் செயலமர்வு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் கிராமங்கள் தோறும் போராட்டங்களை மேற் கொண்டு சிறுபான்மை மக்களின் உரிமை கோரிய அதிகாரப் பகிர்வினை வலியுறுத்தி வந்த போராட்டத்தின் 100 நாளான இன்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்று திரண்ட மக்கள் பிரகடனத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மக்கள் பிரகடனம் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்களான நாம், அதிகாரப் பகிர்வு கோரிய எமது தொடர் நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாளான, 8 கார்த்திகை 2022 ஆகிய இன்றைய தினம், வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கான நிலைபேறான அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை முன் வைக்கிறோம்.


கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களைக் கருத்திற்கொண்டும், 13வது திருத்தத்தின் சாராம்சத்தைப் பரிசீலித்தும், குறிப்பாக 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியத்துவத்துடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிநடாத்தலில் திரு. ஜி. எல். பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினால்ஒஸ்லோ உடன்படிக்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய ,லங்கைக்குள் சமஷ்டி முறையிலான தீர்வு என்பதனை சீர்தூக்கி பாக்கும் இந்த பிரடனம் மக்களின் குரலாக வெளிப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.