வீரர் ஒருவருக்கு ஒரு. வருடம் தடை!!

 


இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட தடை வித்துக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சாமிக்க கருணாரத்னவுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் பல விதிகளை மீறியமை தொடர்பில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினால் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சாமிக்க கருணாரத்ன தமக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே மேற்படி தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.