மேலும் 4 பொருட்களின் விலை குறைப்பு!

 


நாளை முதல் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கும் விற்கப்படவுள்ளது.

அத்துடன் , ஒரு கிலோ கிராம் வௌ்ளைப்பூண்டின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 495 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் , ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 43 ரூபாவினால் குறைக்கப்பட்ட 255 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச நிறுவனம் கூறியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.