இளம் தாயின் உயிரைப் பறித்தது அனுமதியற்ற மருந்து!!

 


மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகத்தில் சளி மருந்து வாங்கி உட்கொண்ட 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மருந்தகத்திலிருந்து தொண்டைச் சளிக்கான மருந்தை பெற்று உட்கொண்ட பெண் ஒருவரே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சிறிக்கட்டு பகுதியைச் சேர்ந்த மலிதி குமாரி என்ற 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தொண்டை வலி தொண்டை வலி காரணமாக அதற்கான மருந்தை மருந்தகம் ஒன்றில் குறித்த தாயார் பெற்றுள்ளார்.

இதனையடுத்து அம் மருந்தை உட்கொண்ட அவரது உடல்நிலை மோசமடைந்து அம்பியூலன்ஸ் மூலம் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறந்த பெண்ணின் உயிரிழப்பு திறந்த தீர்ப்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மாவட்ட மரண விசாரணை அதிகாரி எஸ்.கே.பி.ஜானக கொடிகார உத்தரவிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.