தனுஷ்க குணதிலகாவுக்கு 20 வருட சிறைத்தண்டனையா!!

 


தற்போது அவுஸ்திரேலிய சிறையில் உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு 12 முதல் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஒரு பெண்ணை 4 முறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவர் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கபடுகிறது.


இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், பினை மறுக்கப்பட்டு   சிட்னி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


எவ்வாறாயினும், தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்தக் குற்றச்சாட்டுக்களில் தாம் குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றும், 


தாம் குற்றமற்றவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.