வவுனியாவில் இராணுவத்தால் வீடு கையளிப்பு!!

 


புனர்வாழ்வு திணைக்களத்தால் வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் வறிய நிலையில் உள்ள தமிழ் குடும்பத்திற்கு வீடு கையளிக்கப்பட்டது.புனர்வாழ்வு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சியின் மேற்பார்வையில் புனர்வாழ்வு திணைக்களத்தினதும், நன்கொடையாளர்களதும் கிடைக்கப்பெற்ற 7மில்லியன் நிதி உதவியில் வீடு அமைக்கப்பட்டு இன்றையதினம் (08.11.2022) வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில்  வசிக்கும் வறிய நிலையில் உள்ள குடும்பத்திற்கே குறித்த வீடு கையளிக்கப்பட்டது.வீடு கையளிக்கும் நிகழ்வில் வவுனியா புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் நிலந்த விஜயசிங்க ,  வவுனியா புனர்வாழ்வு நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் கேணல் சம்பத் ரத்நாயக்க, புனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.