அதிக விலைக்கு முட்டை விற்றவருக்கு அபராதம்!!

 


மட்டக்களப்பபில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.


இச்சம்பவம் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான 24-ம் திகதி திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது அரசாங்கம் அறிவித்த முட்டையின் விலை 50 ரூபாக இருந்தபோது அதனை மீறி வர்த்தகர் ஒருவர் 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்து வந்த நிலையில் அவரை பிடித்ததுடன் அவருக்கு எதிராக உடனடியாக அன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை அபதாரமாக ஒரு இலட்சம் ரூபா செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இதேவேளை முட்டையின் கட்டுப்பாட்டுவிலை 50 ரூபாவாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மொத்த வியாபரிகளிடமிருந்து 58 ரூபாவுக்குதான் முட்டையை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை 60 ரூபாவுக்கு விற்கவேண்டியுள்ளதுடன் அதில் இலாபமாக 50 சதம் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறான நிலையில் வடிக்கையாளர்களுக்கு 60 ரூபாவுக்கு முட்டையை விற்கும் போது கட்டுப்பாட்டு விலையை மீறி கூடிய விலைக்கு முட்டையை விற்றதாக நுகர்வோர் அதிகாரசபை எமக்கு எதிராக வழக்கு தொடருகின்ற போது ஒரு முட்டைக்கு ஒரு இலச்சம் ரூபா அபதாரம் விதித்தால் என்ன செய்வது.

எனவே முட்டை வியாபாரம் வேண்டாம் என முட்டை வியாபாரத்தில் ஈடுபட்ட பல வர்த்தகர்கள் முட்டை வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் முட்டைக்கு மாவட்டத்தில் பலத்த தட்டுபாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.