சித்தப்பாவினால் சிறுமி கர்ப்பம் - நீதிபதி இளஞ்செழியனின் அதிரடித் தீர்ப்பு!!
16 வயதுக்கு குறைந்த சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனை கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 20ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத் தவறும் படசத்தில் இரு ஆண்டகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு மே மாதம் வவுனியா கிழவன்குழம் என்னும் இடத்தில், தாயார் வெளிநாடு சென்றதன் காரணமாக தாயாரின் தங்கையின் வீட்டில் இந்த 15 வயதுடைய சிறுமி வாழ்ந்து வந்த வேளை தங்கையின் கணவரான சித்தப்பாவினால் குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து, டிஎன்ஏ பரிசோதனை செய்ததன் மூலம் அந்த குழந்தைக்கு, சிறுமியின் சித்தப்பா முறையான உறவினரே தந்தை என உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தால் இந்த தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனையை குறைக்குமாறு கோரிய விண்ணப்பம் மன்றினால் நிராகரிக்கப்பட்டது. 15 வயதான சிறுமியை தாயாக்கியது பாரதூரமான குற்றம் என தெரிவித்து இந்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை