பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கிய லால் சலாம்!!

 



ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் காமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடிக்க கமிட்டாகியுள்ளார்கள்.


மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.



லால் சலாம் படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.