ஜேர்மன் தொழிலாளருக்கு அடித்த லொட்டரி அதிர்ஷ்டம்!

 ஜேர்மனியின் டார்ட்மண்டில் வசிக்கும் குர்சாட் யில்டிரியம் என்பவர் சுமார் 9,927,511,60 யூரோக்கள் லொட்டரியை வென்றுள்ளார்.


செப்டம்பர் 24ம் திகதி ஜேர்மனியின் டார்ட்மண்ட் பகுதியில் வசிக்கும் குர்சாட் யில்டிரிம் (Kursat Yildirim) என்ற 41 வயது ஸ்டீல் ஆலை தொழிலாளிக்கு, சுமார்  9,927,511,60 யூரோக்கள்(81 கோடி) மதிப்பு கொண்ட லொட்டரி பரிசு கிடைத்துள்ளது.


குர்சாட் யில்டிரிம் இந்த லொட்டரியை வெற்றி பெற்றவுடன் 3.6 கோடிக்கு ஃபெராரி 448 பிஸ்தாவையும்(Ferrari 448 Pista), 2 கோடிக்கு போர்ஸ் டர்போ எஸ் கேப்ரியோலெட் (Porsche Turbo S Cabriolet) ஆகிய விலை உயர்ந்த இரண்டு கார்களை வாங்கியுள்ளார்.


தனது வேலைகளில் இருந்து உடனடியாக விலகிய  குர்சாட் யில்டிரிம், லொட்டரி தொகையில் தனக்கு பிடித்த மதுபானங்களையும், விலையுயர்ந்த கடிகாரத்தையும் வாங்கியுள்ளார்.


தான் வெற்றி பெற்ற அனைத்து தொகையையும் செலவு செய்ய ஒரு அழகான பெண்ணை வாழ்க்கை துணைவியாக மாற்றிக் கொள்ள தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஜேர்மன் செய்தித்தாளான பில்டிடம் குர்சாட் அளித்த விளக்கத்தில், “நான் இன்னும் தனிமையில் இருக்கிறேன், நான் காதலிக்க விரும்புகிறேன், அதற்காக பயணம் செய்ய விரும்பும் என்னுடன் காதலிக்க தயாராக இருக்கும் பெண்ணை நான் தேடுகிறேன்”


“அவள் அழகியோ, பொன்னிறமானவளோ எனக்கு கவலையில்லை, என்ன நடந்தாலும் நான் நம்பக்கூடிய பெண்ணாக அவள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


குர்சாட் தனது வாழ்க்கை துணையை கண்டறிய ஜேர்மன் டேப்ளாய்டு ஒன்று மின்னஞ்சல் முகவரி ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்

  வெற்றி பெற்றவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளேன், பணம் பாதுகாப்பாக உள்ளது, தொண்ணூறு சதவீதம் பேர் நான் இதற்கு தகுதியானவன் இல்லை என்று கருதுகிறார்கள்.


என்னை நம்புங்கள், நான் ஒருபோதும் எதையும் மறக்க மாட்டேன், நான் உழைக்கும் மனிதன், ஒருபோதும் திமிர் கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.