காதலால் இளம்பெண்ணின் பரிதாப நிலை!!

 


இளம் யுவதியொருவரை வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, ஓடும் வாகனத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்ட முன்னாள் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

காலி, படபொல பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) இரவு 7:00 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த யுவதி இன்னும் சுயநினைவின்றி மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள யுவதியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படபொல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் யுவதி சில காலத்திற்கு முன்னர் ஆண் ஒருவருடன் காதல் தொடர்பை பேணிய நிலையில், அந்த நபரின் தகாத நடத்தைகளால், யுவதி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், யுவதியை பழிவாங்க இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. படபொல தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வைத்து யுவதியை வாகனத்தில் இழுத்து ஏற்றிச் சென்ற நிலையில் தகவலறிந்த யுவதியின் சகோதரன் வாகனத்தை விரட்டிச் சென்றுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.