பொட்டுக்கடலை சட்னி 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

 


பொட்டுக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்: 
பொட்டுக்கடலை – 5 டேபிள்ஸ்பூன், 
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், 
இஞ்சித் துண்டு – ஒரு இன்ச், 
புளி – சிறு கோலி குண்டு அளவு, 
பூண்டு பல் – 2, 
உப்பு – தேவையான அளவு, 
மல்லித்தழை – சிறிதளவு, 
பச்சை மிளகாய் – 4, 
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், 
கடுகு – அரை டீஸ்பூன், 
உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன், 
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், 
கருவேப்பிலை – ஒரு கொத்து, 
வர மிளகாய் – 2 பெரிய 
வெங்காயம் -1.


முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொஞ்சமாக தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு பத்தை தேங்காயை சில்லுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு பொட்டுக்கடலையை தாராளமாக சேர்த்துக் கொள்ளுங்கள். பொட்டுக்கடலையுடன் நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். தேங்காய் கொஞ்சமாகவும், பொட்டுகடலை அதிகமாகவும் இருப்பது தான் இதனுடைய ஸ்பெஷல். பின்னர் இதனுடன் இஞ்சி துண்டு ஒரு இன்ச் அளவிற்கு தோல் நீக்கித் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளி போட்டுக் கொள்ளுங்கள்.


புளி சேர்த்ததும் 2 பூண்டுப் பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிய சிறிய அளவில் இருந்தால் நான்கு சேர்த்துக் கொள்ளலாம். சிலர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு முதலில் ஒரு சுற்று சுற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரை திறந்து அதில் கொஞ்சமாக மல்லி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். 


பொட்டுக்கடலை அதிகம் சேர்ப்பதால் இனிப்பாக இருக்கும் எனவே மூன்று பெரிய பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.  இப்போது மீண்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தேவையான பதத்திற்கு சட்னியை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னியை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். இந்த பொட்டுக்கடலை சட்னி கெட்டியாக வேண்டும் என்றால் இப்படியே தாளித்து பரிமாறலாம், தண்ணீராக வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளலாம். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை விட்டு காய விடுங்கள்.


எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் பெருங்காயத் தூள் கால் ஸ்பூன் அளவிற்கு தாளித்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போடுங்கள். இதனுடன் 2 வர மிளகாய்களைக் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கருகாத அளவிற்குப் பிரவுன் நிறத்தில் வரும் வரை நன்கு வறுத்து தாளித்துக் கொள்ளுங்கள். வீடே மணக்கும் கமகமவென வாசனையுடன் இந்த பொட்டுக்கடலை சட்னி நீங்களும் இதே முறையில் செய்து அசத்துங்கள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.