குளிர்காலத்தில் உண்ணவேண்டிய உணவுகள்!!

 குளிர்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை உங்கள் உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் யோசிக்கின்றீர்களா? இனி கவலை வேண்டாம்! பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேககர் இது சம்மந்தமாக சில குறிப்புகளை உங்களுக்கு வழங்கி உள்ளார். திவேகரின் கூற்றுப்படி, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருவது, உங்களுக்கு இறுக்கமான மூட்டுகள், இரைப்பை பிரச்சினைகள், தோல் முறிவுகள் போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிலும், குளிர்காலம் தொடங்கியவுடன் இது போன்ற பிரச்சனைகளை சாமளிப்பது என்பது இன்னும் கடினமாகிவிடும்.


ஆகையால், சூப்பர் ஃபுட்கள் என்று சொல்லக்கூடிய இந்த 10 உணவு வகைகளை குளிர்காலத்தில் நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவு வகைகள் ஆனது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது; அது மட்டுமல்லாமல், உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.நம் அன்றாட உணவில், பச்சை காய்கறிகளைச் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகவும்.


பச்சை காய்கறிகளின் ஆரோக்கிய நன்மைகள்:


- பச்சை காய்கறிகள் ஆனது, அழற்சி எதிர்ப்பு (ஆன்டி இன்ஃபிளாமேட்டரி) பண்புகளைக் கொண்டுள்ளது.


- கைகளிலும் கால்களிலும் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவுகிறது.


- புற்றுநோயைத் தடுக்கக் கூடிய சிறந்த உணவுகளில் ஒன்றாக இந்த பச்சை காய்கறிகள் உள்ளது.


- பச்சை காய்கறிகளில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக காணப்படுகிறது.


நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய பச்சை காய்கறிகளில் சில:


- பாலாக் கீரை


- வெந்தய கீரை (மேத்தி)


- புதினா இலைகள்


- பச்சை பூண்டு


- மேலும், கீரை வகைகள் பொதுவாகவே நல்லது


​வேர் உள்ள காய்கறிகள்


கருணை கிழங்கு (குறிப்பாக, ஊதா நிற கருணை கிழங்கு), நூக்கல், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், சக்கரவள்ளி கிழங்கு போன்ற வேர் உள்ள காய்கறிகளை நீங்கள் உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும்.


 வேர் உள்ள கிழங்கு வகைகளை வேகவைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணையில் வருத்து கூட சாப்பிடலாம்


- சக்கரவல்லி கிழங்கை வேகவைத்து அப்படியே சாப்பிடலாம்.


சீத்தாப்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம்


- நன்கு பழுத்த பழத்தை சாப்பிடுங்கள்.


- பழத்தை கழுவிய பின் முழுமையாக அப்படியே கூட சாப்பிடலாம்.


- மதிய உணவிற்கு பதிலாக கூட, நீங்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.


எள்ளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆல் நிறைந்துள்ளது.


- மேலும் இது, எலும்புகள், தோல்கள், மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.


எள்ளை எவ்வாறு பயன்படுத்துவது?


- எள்ளை வைத்து, எள்ளு லட்டு அல்லது எள்ளு பர்ஃபி தயார் செய்யலாம்


வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள்:


- வேர்க்கடலையில் வைட்டமின் பி, பாலிபினால்கள், மற்றும் அமினோ அமிலங்கள், போன்றவை நிறைந்துள்ளது


- இது இதயத்திற்கு மிகவும் நல்லது.


இதனை எப்படி சாப்பிடுவது?


- வேர்க்கடலையை நீங்கள் வேகவைத்தோ அல்லது வறுத்தெடுத்தோ சாப்பிடலாம்.


- வேர்க்கடலை சட்னி சாப்பிடலாம்


- சாலட் மற்றும் சப்ஜிகள் போன்றவற்றில் சேர்த்து கூட சாப்பிடலாம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.