கந்தக்காடு கைதிகளில் 35பேர் சரணடைவு!!

 நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து  கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.


நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.


போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.