வெளியானது 'ரஞ்சிதமே.. ரஞ்சிதமே...' பாடல்!!

 


இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார்.


தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.


இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் தமன் பெற்றுள்ளார் .


இப்படத்தின், முதல் தனிப்பாடல் சற்று முன்னர் வெளியானது.


எஸ். தமனின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விஜய் மற்றும் மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.


ரஞ்சிதமே.. ரஞ்சிதமே... என்ற இந்த பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம், தைப்பொங்கலை முன்னிட்டு அடுத்த வருடம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.