இலங்கை அணி வெற்றி


 ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டி இடம் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை



பெற்றுக் கொண்டது.


துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.