வியட்நாமில் உயிரிழந்த யாழ் நபர்!!


 வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.


சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றபோது படகு பழுதடைந்ததால் இலங்கையர்கள் 303 வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயன்ற  நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 8ஆம் திகதி      இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு  வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்  கூறிவருகின்றனர்.


எனினும் அவர்களை  நாடு கடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தாம் நாடு திரும்ப போவதில்லை எனவும் தெரிவித்து, இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக அண்மையில் செய்திகள்  வெளியாகியிருந்தன.


இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டிருந்த நிலையில் குறித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.