தவராசாவின் உடல் குடும்பத்தவரிடம் ஒப்படைப்பு!!

 


சவூதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த தம்பிஐயா தவராசா எனும் 64 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சுமார் இருபது வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் சவூதி - தமாம் பகுதியில் அவர் மரணமடைந்துள்ளார்.


மரணமடைந்தவரின் உடல் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவை அமைப்பின் வாகன சேவை ஊடாக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.     


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.