அச்சுவேலியில் துவிச்சக்கர வண்டி திருத்தும்கடை உடைத்து திருட்டு!

 


அச்சுவேலி மேற்கு தென்மலை பகுதியில் உள்ள துவிச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்தினை உடைத்து பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

திருத்தும் நிலையத்தின் முன் கதவினை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் துவிச்சக்கர வண்டி 1. , ஜந்து ரயர்கள், பெட்டியில் இருந்த பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

இன்று காலை கடையினை திறந்த பொழுது களவு போனமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பாரதி வீதி பகுதியினை சேர்ந்த கடை உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.