மகன், மகளுடன் தாயும் உயிரிழப்பு!!

 


கடந்த ஒக்டோபர் மாதம் கனடா - மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் , காயமடைந்து சிகிற்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் மகன் மற்றும் மகள் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில் தாயார் அதிதீவிர சிகிற்சைப்பிரிவில் அனுமதிகப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.


ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மூன்று பேர் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் 21 வயதான இளைஞனும், 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

அவர்களுடன் பயணித்த தாயார் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் விபத்து சம்பவம் தொடர்பில் Vaughan நகரை சேர்ந்த 46 வயதான பார ஊர்தி ஓட்டுநர் மீது ஏற்கனவே மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.