வங்கி மேலாளரால் சிறுமிக்கு நடந்த துயரம்!!

 


கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது சிறுமியை பொது வாகன நிறுத்துமிடத்திற்கு இருண்ட கண்ணாடியுடன் ஜீப்பில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி தற்போது உயிருடன் இல்லை என்பதோடு 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி கொழும்பை அண்மித்த பகுதியில் வசிப்பவர் எனவும், சில மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்த போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்து துண்டிக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது, அதற்கு பதிலளித்த சிறுமி யார் என்று கேட்டபோது, ​​“ஏன் சோகமாக பேசுகிறீர்கள்” என ஒருவர் கூறியதாகவும், இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கு சந்தேக நபர் தனக்கு முப்பத்தொன்பது வயது என சிறுமியிடம் கூறியுள்ளார். மனைவி இறந்து விட்டதாகவும், இரண்டு மகள்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறித்த நபர் சிறுமியிடம் தனது கையடக்க தொலைபேசி இலக்கத்தை வழங்கியதாகவும், சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த தொலைபேசி ஊடாகவும் தனது தந்தையின் தொலைபேசியை தந்தைக்கு தெரியாமலும் எடுத்து, அந்த நபருடன் தொலைபேசியில் யோசனைகளை பரிமாறிக்கொண்டதாகவும் சிறுமியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்று முதல் சிறுமி பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம், அந்த நபர் தனது இருண்ட கண்ணாடி கொண்ட ஜீப்பில் சிறுமியை அழைத்துச் சென்று பொது வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்று, அவளது ஆடைகளை களைந்து, மானபங்கம் செய்துள்ளார்.

சில சமயங்களில் சிறுமி தனது பாடசாலை பையில் வண்ண ஆடைகளை எடுத்துச் சென்று ஜீப்பில் உடைகளை மாற்றிக்கொண்டு சந்தேக நபருடன் அங்கு நேரத்தை செலவிட்டதாகவும், பாடசாலை முடியும் நேரத்தில் மீண்டும் பாசாலை சீருடையை அணிந்து கொண்டு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.

அந்த சமயங்களில் இருவரும் சாப்பிடுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து துரித உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை வாங்கி கொடுத்ததாக சிறுமி அளித்த வாக்குமூலத்தில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது. இந்த தொடர் உறவை வகுப்பின் தோழி ஒருவருக்கு மட்டுமே தெரியும் எனவும், சந்தேக நபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 18 வயது வரை இப்படியே இருந்து அதற்குப் பின்னர் இந்த உறவை நிறுத்துமாறு கூறியதாகவும் சிறுமி வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர், வீட்டின் தொலைபேசியின் பதிவைப் பெற்று பொலிஸில் முறையிட்டபோது தெரியாத தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சில இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிசார் விசாரணைகளை நடத்தினர்.

சந்தேக நபருடன் நேரம் செலவிட்டதன் காரணமாக குறித்த சிறுமி பாடசாலை நடவடிக்கைகளையும் தவறவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரின் விபரங்களை அறிந்து பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.