தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும்!

 


கார்த்திகை தீபத்திருவிழா அன்று நமது வீட்டில் 48 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 48 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்கள் 9 + ராசி 12 + நக்ஷத்ரங்கள் 27 என 48 தீபங்கள் ஏற்றும் போது தடைகள் அகலும்.

கார்த்திகை மாதம் என்பது சூர்ய பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதமாகும். ஜோதிட ரீதியாக விருச்சிக ராசி என்பது காலபுருஷ தத்துவத்தில் எட்டாம் ராசியாக வருகிறது. எனவே அந்த மாதத்தில் நமக்கு மனச்சலனம் ஏற்படலாம். மனதில் சலனம் ஏற்படும்போது விளக்கினை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்போது நமது மனம் ஒருமுகப்படும். நம்மால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியும்.குழப்பங்கள் அகலும். தெளிவான மனநிலையோடு நடந்து கொள்ள முடியும்.

அதனால்தான் வான்வெளியில் முழுநிலவான பௌர்ணமி நாளில் பூமியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோம். அப்படி செய்யும் போது இன்னும் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். நன்மைகளே நடக்கும் என்பது ஐதீகம்.

திருக்கார்த்திகை தீபம் எப்போது?

பரணி தீபம்

கார்த்திகை மாதம் 19ஆம் திகதி - 05.12.2022 திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு ஏற்ற வேண்டும்.

கார்த்திகை மாதம் 20ஆம் திகதி - 06.12.2022 - செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு ஏற்ற வேண்டும்.

ஸ்ரீவைணவர்களுக்கு தீபம் கார்த்திகை மாதம் 21ஆம் திகதி - 07.12.2022 - புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு ஏற்ற வேண்டும்.

இதில் ஸ்ரீவைணவர்களுக்கு கிருத்திகையும் - பௌர்ணமியும் சூரியன் உதிக்கும் நேரத்தில் இருப்பதை ப்ரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சைவர்களுக்கு கிருத்திகையும் - பௌர்ணமியும் இரவு தங்க வேண்டும்.

எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

பொதுவாக விளக்கு என்பது ஒற்றைப்படையில் ஏற்றுவது நல்லது. நமது வீட்டில் 48 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 48 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்கள் 9 + ராசி 12 + நக்ஷத்ரங்கள் 27 என 48 தீபங்கள் ஏற்றும் போது தடைகள் அகலும். தீபத்திருநாளில் தீபம் ஏற்றி வழிபட நம் இல்லத்தில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள் என்பது நம்பிக்கை.

குத்து விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். செல்வ வளம் பெருகும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

சுடரில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்கள் உறைவதாக ஐதீகம். எனவேதான் நம்முடைய வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். அதனால் கார்த்திகை அன்று தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளை பெறலாம்.

விளகேற்றும் முறை தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. மற்ற விளக்குகள் பழையதாக இருக்கலாம். விரிசல் இல்லாமல், உடையாத நல்ல மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முறையாகும். அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி அல்லது நூல் திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவதுதான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம். பெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். இதன் மூலம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தீபத்தின் ஒளி பரவி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.

மேலும் நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். மறந்து விடாமல் சமையலறையிலும் விளக்கேற்றுவது அவசியம். சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம்.  துளசி செடி வைத்திருப்பவர்கள் அதற்கும் ஒரு விளக்கை தனியாக ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை செடிகள் இருந்தால் நிச்சயம் அவற்றிற்கும் ஏற்றி வைக்க வேண்டும். இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை.ம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.