சுதந்திர தின விழா யாழிலும் - ஜனாதிபதியும் பங்கேற்பு!

 




இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று குறிப்பாக பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதற்குப் பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற கலாசார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயற்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கான ஆரம்ப கலந்தரையாடல் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

கலாசார மத்திய நிலைத்தினுடைய இணைப்பு முகாமைத்துவ குழுவில் இருக்கின்ற ஆளுநர் மற்றும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ். மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாசார அமைச்சுடன் இணைந்ததாக கலாசார மத்திய நிலையத்தில் கலாசார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஒட்டியதாக சுதந்திர தின நிகழ்வை முக்கியமாக மாகாண மட்டத்திலே இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் , ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதால் பெரியளவில் அது இடம்பெறவுள்ளது என்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.