பெருவில் ஊரடங்கை மீறி போராட்டம்!!

 


பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியான டினா பொலுவர்ட்டை இராஜினாமா செய்ய கோரி போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில்,நேற்று நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் 8 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


பெருவில் ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ கெஸ்டிலோ சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


சில நாட்களுக்கு முன்னர் அவசர நிலையை அறிவித்த கெஸ்டிலோ நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி அவரின் பதவியை பறித்தனர்.


மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக கெஸ்டிலோ கைது செய்யப்பட்டதையடுத்து துணை ஜனாதிபதியாக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.


இதற்கிடையே கெஸ்டிலோவின் ஆதரவாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்ட நிலையில் இடங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து பெருநாட்டில் கடந்த 14 ஆம் திகதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.


இந்த நிலையில் பெட்ரோ கெஸ்டிலோ பதவி நீக்கம் மற்றும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர நிலையை மீறி அவர்கள் போராட்டங்களில் குதித்தனர்.


அயகுக்கோவில் உள்ளூர் நீதித்துறை மற்றும் சட்டத்தரணி அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு, பல இடங்களில் முக்கிய சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் 5 விமான நிலையங்களை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் விமான நிலையம் மற்றும் பிற இடங்களில் தாக்குதல்களை தடுக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தினர்.


ஆனாலும் கெஸ்டிலோவை விடுவிக்க கோரியும், புதிய ஜனாதிபதி டினா பொலுவார்ட்டை இராஜினாமா செய்ய கோரியும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நேற்று நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், அங்கு வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  20 ஆக உயர்ந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.