சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்கிறார் பிணவறை ஊழியர்!!

 



நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை என பரபரப்பு தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.


இந்த தகவலை சுஷாந்தின் உடல் கூராய்வு பரிசோதனை செய்யும்போது உடனிருந்த பிணவறை ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.


இவரின் உடலை உடல் கூராய்வு பரிசோதனை செய்யும்போது அந்த குழுவில் இருந்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், "சுஷாந்த் சிங் உயிரிழந்த தினத்தன்று எங்களது கூப்பர் மருத்துவமனைக்கு, 5 சடலங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று பிரமுகரின் சடலம் என்றனர்.


நாங்கள் அங்கே போய் பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரியவந்தது.


அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன.


உடற்கூராய்வு செய்வதை முழுவதுமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கக் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம்.


சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சிரேஷ்ட அதிகாரிகளிடம் கூறினேன்.


ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம்" என அவர் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.