நிலக்கரி தட்டுப்பாடு!!

  


ஜனவரி முதல் வாரம் வரை மட்டுமே   நுரைச்சோலை ஆலையின் நிலக்கரி இருப்பு  போதுமானது, 

எனவே அதன் பின்னர் நுரைச்சோலை ஆலையின் முழு உற்பத்தியைப் பெறுவது பாரிய பிரச்சினையாக உள்ளதாக நுரைச்சோலை ஆலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அனல்மின் நிலையத்தின் 3 இயந்திரங்களும் இயக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் ஒன்றை நிறுத்தினால் மட்டுமே, மீதமுள்ள இரண்டு இயந்திரங்களை ஜனவரி 10ஆம் திகதி வரை இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனவரி மாதம் முதல் மின்வெட்டு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார். ஆலைக்கு தேவையான நிலக்கரியை சப்ளை செய்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பணத்தைப் பெறுவதாக ஒப்புக்கொண்ட ரஷ்ய நிறுவனம் வாபஸ் பெற்றதால் நிலக்கரி கொள்முதல் நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.