ஜப்பானில் இலவச வேலை வாய்ப்பு!
ஜப்பானில் இலவச வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரத்தின் அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று (28) காலை பெருமளவானோர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 20 காலியிடங்களுக்கான விளம்பரம் மாத்திரமே பிரசுரிக்கப்பட்டமை அங்கு சென்ற பின்னர் மக்களுக்கு தெரியவந்தது.
பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நீண்ட வரிசையில் பலர் காத்திருந்தனர்.
பணியகம் வெளியிட்ட முகநூல் பதிவின் அடிப்படையில் நாடு முழுவதிலுமிருந்து பலர் அங்கு வந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன் காத்திருந்துள்ளனர்.
ஜப்பானில் இருக்கை தயாரிப்பு தையல் வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரத்தை பார்த்தே இவர்கள் வந்திருந்தனர். எனினும் பதவிக்கு விண்ணப்பிக்க சரளமான ஜப்பானிய மொழி அறிவு இருக்க வேண்டும் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் 20 பெண்களுக்கே தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் இதன்போது அறிவித்தனர். இந்தநிலையில் தெரிவுசெய்யப்படும் 20 பெண்களுக்கு 4 மாதக்கால பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த முழு செயல்முறையையும் முடித்த பின்னரே அவர்கள் வேலைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை