சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு – சி.வி.விக்னேஸ்வரன்!

 


இந்தியாவுடன் இலகுவில் இணைக்கப்படக் கூடிய மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலிட முன் வரும்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழில் முனைவாளர்கள், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், சேவைத்துறை சார்ந்தவர்களுடன் இணைய வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு எனவும் துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.