காரைப் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!!

 
வாகன குளிரூட்டி AC யுடன்   தொடர்புடைய தாக கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும்.

 இது இயங்கநிலையில் {ஒன்}  செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும்.

இதை ஓவ்  செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்துக் குளிரூட்டும்.

நாம் வாகனம் செலுத்தும் போது வெளியில் இருந்து காற்றை எடுப்பதால் குளிரூட்டுவது சற்று குறைவாக இருப்பதாலும்

 வெளியில் இருந்து வேறுவித வாசனைகள் உள்ளே வருவதாலும் 

அநேகமாக எல்லோரும் காருக்குள்ளேயே இருக்கும் காற்றை குளிரூட்டும்(Internal cooling) பட்டனை ஆன் நிலையிலேயே வைத்திருப்போம்.ஆனால் நீண்டதூரம் பயணம் செய்யும் போதோ அல்லது நிறைய நபர்கள் பயணம் செய்யும் போதோ உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும் சந்தர்ப்பத்தில் உள்ளே ஆக்ஸிஜன் அளவு குறைந்து நம் சுவாசம் காரணமாக கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்து காணப்படும். 

இந்த வேளையில் வாகனம் செலுத்துபவருக்கு அதிக கொட்டாவி நித்திரை மயக்கம் உடல் சோர்வு என்பன ஏற்படும்.

இந்த வேளையிலேயே நாம் வாகனத்தை விட்டு வெளியில் வந்து கால் கையை அசைப்பதாலோ அல்லது முகம் கழுவுவதாலோ அல்லது ஒரு கடைக்கு சென்று ஒரு தேநீர் அருந்துவதாலோ பழைய நிலைக்கு வருவது போல உணர்வோம்.


அது உண்மையில் வெளியில் வந்து நல்ல ஆக்ஸிஜனை சுவாசிப்பதால் உடல் பழைய நிலைக்கு திரும்புகிறது.

இதேவேளை வாகனம் செலுத்தும் போது அதிக கொட்டாவி சோர்வு நித்திரை மயக்கம் வந்தால் அடிக்கடி கீழுள்ள பட்டனை ஆஃப் நிலைக்கு கொண்டு வந்து, 

வெளியில் உள்ள காற்று உள்ளே வர வாய்ப்பளித்தால் வெளியில் உள்ள காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உள்ளே வருவதால் கொட்டாவி குறைவதை உணர்வீர்கள்.

எனவே தூர பிரயாணம் செய்பவர்கள் நகர்ப்புற பகுதிகளில் இடையிடையே

(ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை ) கீழுள்ள பட்டனை ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆஃப் செய்து 

வெளியில் உள்ள காற்றை உள்ளே எடுத்து குளிரூட்டுவதால் நித்திரை மயக்கம் வருவதை ஓரளவு தடுக்கலாம் 

நாமும் உடல் சோர்வு இன்றியும் பயணிக்கலாம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.