சுவிஸில் நடந்த கோர விபத்து - தந்தை மகன் பலி!!
கடந்த சனிக்கிழமை சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , நேற்றையதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
உள்நாட்டுப் போரால் உயிர் காக்க புலம்பெயர்ந்து சென்று அங்கு விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை சுவிஸ்சர்லாந்தில் கடும் குளிருடனான காலநிலை நிலவிவரும் நிலையில், மக்கள் தமது பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை