பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

 தென் இந்திய திரையுலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh). தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், காக்கா முட்டை மற்றும் கனா உள்பட பல்வேறு வெற்றிப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


இந்த சூழலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், டிரைவர் ஜமுனா (Driver Jamuna) என்ற புதிய திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், டிரைவராக நடித்துள்ளார். டிரைவர் தொழிலில் தற்போது முழுக்க முழுக்க ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் கார் மட்டுமல்லாது, லாரி மற்றும் பஸ் போன்ற பெரிய வாகனங்களையும் பெண்கள் தற்போது ஓட்ட தொடங்கியுள்ளனர். முறையான பயிற்சியை பெற்று திறன்மிக்க டிரைவர்களாகவும் அவர்கள் உருவெடுத்து வருகின்றனர்.


டிரைவர் ஜமுனா படத்தின் ப்ரொமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக, 40 ஆட்டோ மற்றும் கால் டாக்சி டிரைவர்களை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தித்தார். அவர்கள் அனைவருமே பெண்கள் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.


40 பெண் டிரைவர்களில் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு புதிய ஆட்டோ ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் பரிசாக வழங்கியுள்ளார். டிரைவர் ஜமுனா படக்குழுவின் சார்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பரிசை வழங்கினார். அந்த பெண் ஆட்டோ டிரைவர் கஷ்டத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே வெறும் ப்ரொமோஷனுக்காக மட்டுமல்லாமல், உண்மையில் அவரின் ஏழ்மையை நிலையை அறிந்தே இந்த பரிசு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.