இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

 மேஷம்

aries-mesham

இன்று வளமும் பெறும் இனிய நாள். வியாபாரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். அழகிய பெண்களின் சிநேகமும், அழகான தனி வீடு அமையும். சுப காரியங்கள் நிறைவேறும்.ரிஷபம்

taurus-rishibum

கௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்களைத் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மனஅமைதி பெற தியானம் செய்க.மிதுனம்

gemini-mithunum

வியாபாரத்தில் ஏற்படும் இடைஞ்சல்களை தவிர்க்கப் பணியாளர்கள் ஒத்துழைப்புத் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.கன்னி

virgo-kanni

எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும். புத்தாடை அணிகலன்கள், வாசனைத் திரவியங்களும் சேரும். வாய்க்கு ருசியாக நல்லுணவுக்குக் குறைவிருக்காது.


மகரம்

capricorn-magaram

தெய்வபக்தி மேலிட தெய்வீக காரியங்கள் ஈடேறும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.கடகம்

cancer-kadagam

மனம் கோணாதபடி பணிவிடை செய்யும் மனைவியின் உதவி கிடைக்கும். பல வழிகளில் வருமானம் பெருக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சகோதர நன்மை உண்டு.சிம்மம்

leo-simmam

நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்கவும். பதவி அல்லது இட மாற்றங்கள் ஏற்படலாம்.துலாம்

libra-thulam

பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். வீண் வம்புக்கு செல்லாதிருப்பது நல்லது. மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.


மீனம்

pisces-meenam

பணவரவு உண்டு. தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.


தனுசு

sagittarius-thanusu

நினைத்த காரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள், புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்குக் கட்டளை இடும் படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும்.


விருச்சிகம்

scorpio-viruchagam

தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு மரியாதை கூடும். பெண்களால் உதவியும் பிரிந்திருந்தவர் கூடியும் மகிழ்வர்.கும்பம்

aquarius-kumbam

எதிலும் நேர்மையாக நடக்க வேண்டிய நாள். தவறு செய்தால் தண்டிக்க படுவீர்கள். உயர்வு வரும்போது பணிவு வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.